பல்வேறு எதிர்ப்புக்கு இடையே நீட் தேர்வு முடிந்தது; தேர்வு கடினமா, எளிதா?... மாணவர்கள் பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 13, 2020

பல்வேறு எதிர்ப்புக்கு இடையே நீட் தேர்வு முடிந்தது; தேர்வு கடினமா, எளிதா?... மாணவர்கள் பேட்டி

பல்வேறு எதிர்ப்புக்கு இடையே நீட் தேர்வு முடிந்தது; தேர்வு கடினமா, எளிதா?... மாணவர்கள் பேட்டி

நீட் நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு  கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ல் சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு  நடந்து வருகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளிவிலான நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக  நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடங்கியது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம், இந்திக்கு உறுதி மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணியுடன் முடிவு அடைந்தது. தமிழகத்தில் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 பேர் நீட் தேர்வு எழுதினர்.


இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு நிறைவடைந்ததை அடுத்து தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு குறித்து பேசுவதாவது; நீட் நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் சிலர், நீட் தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். காலை 11 மணிக்கே தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சில பள்ளியில் பிஸ்கட் வழங்கினர்.

எழுதியவர்களில் சில  நீட் தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் பாடப் பிரிவில் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை. வேதியியல், இயற்பியல் பாடப் [பகுதியில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் இருந்து 20 முதல் 30சதவிகிதம் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தனர். பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கபட்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மேலும் நீட் தேர்வில் தாவரவியல் உயிரியல்,வேதியியல் பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முறை நீட் எளிதாகவே இருந்தது என பல மாணவர்கள் தங்களது தேர்வு அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment