பட்டதாரிகளை இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட டில்லி IIT - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 6, 2020

பட்டதாரிகளை இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட டில்லி IIT

 பட்டதாரிகளை இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட டில்லி IIT


நாயை பராமரிக்க பி.ஏ, பி.எஸ்சி., பி.காம்., பி.டெக் முடித்த பட்டதாரிகள் தேவை எனவும், சம்பளம் ரூ.45,000 வழங்கப்படும் எனவும் டில்லி ஐஐடி வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


டில்லி ஐஐடி, கல்வி சாரா பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாயை பராமரிக்கும் பணிக்கு, குறைந்தபட்சம் பி.ஏ, பி.எஸ்சி., பி.காம்., பி.டெக் முடித்திருக்க வேண்டும் எனவும், வயது 21லிருந்து 35க்கும் இருக்க வேண்டும் எனவும், இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.45,000 வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் நாயை கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்வதற்காக வாகனம் வைத்திருக்க வேண்டும் எனவும், ENGLISH மற்றும் ஹிந்தி மொழி பேசத்தெரிந்திருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


டிகிரி முடித்தவர்களையும், கல்வியையும் கிண்டல் செய்யும் விதத்தில், டில்லி ஐஐடி, இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சமூக வலைதளத்தில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு வைரல் ஆனதை தொடர்ந்து, அந்த பணிக்கான நேர்காணலை ஐஐடி ரத்து செய்துள்ளது.


இதுகுறித்து விளக்கமளித்த டில்லி ஐஐடி இயக்குனர் ராம்கோபால் ராவ், டுவிட்டரில், அறிவிப்பில் தவறுதலாக பி.டெக் என அச்சிடப்பட்டதாகவும், இது மனித தவறு என்பதால் விட்டுவிடுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment