JEE தேர்வில் 7.78 லட்சம் பேர் பங்கேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 1, 2020

JEE தேர்வில் 7.78 லட்சம் பேர் பங்கேற்பு

 JEE  தேர்வில் 7.78 லட்சம் பேர் பங்கேற்பு


பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) நேற்று தொடங்கியது. நாடு  முழுவதும் 7 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வில்  பங்கேற்கின்றனர்.  நாட்டில் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பிஇ, பிடெக், மற்றும் பிஆர் படிப்புகளுக்கு  ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. 

இந்த ஆண்டு மே மாதம் நடப்பதாக இருந்த இந்த நுழைவுத் தேர்வு கொரோனா காரணாமாக  செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில், 7 லட்சத்து  78 ஆயிரம் பேர்தான் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக  நேற்று இந்த நுழைவுத் தேர்வு தொடங்கியது. இது 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 264 நகரங்களில் 660 தேர்வு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


வெளி நாடுகளில் 9 இடங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி,  திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் தேர்வு  மையம் அமைக்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு திண்டுக்கல் தேர்வு மைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோவிளாம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட 15  இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment