ஒரேயொரு தவறுக்காக காத்திருக்கும் மோசடியாளர்கள்: எச்சரிக்கும் SBI - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 28, 2020

ஒரேயொரு தவறுக்காக காத்திருக்கும் மோசடியாளர்கள்: எச்சரிக்கும் SBI

 ஒரேயொரு தவறுக்காக காத்திருக்கும் மோசடியாளர்கள்: எச்சரிக்கும் SBI


சேவைகளையும் பணிகளையும் எளிதாக்க எத்தனைக்கு எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளதோ, அத்தனைக்கு அத்தனை மோசடிகளும் பெருகிக் கொண்டே செல்கிறது.


ஒரு விதமான மோசடியைக் கண்டுபிடித்து அதனைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் முடிவடைவதற்குள் அடுத்த மோசடி ஆரம்பித்துவிடுகிறது


தற்போது வாட்ஸ்-அப் மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.


அந்த எச்சரிக்கை செய்தியில், வங்கி சார்பில் நடத்தப்பட்ட லாட்டரி அல்லது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் போட்டியில் பரிசு பெற்றதாகக் கூறி, இந்த எண்ணை தொடர்புகொள்ளவும் என்று மோசடியாளர்கள் தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, வாட்ஸ்-அப் வழியாக வரும் தகவல் அல்லது அழைப்புகளை நம்பி வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது தகவல்களை அளிக்க வேண்டாம்.


எஸ்பிஐ வங்கி தரப்பில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாடிக்கையாளரின் விவரங்களை கேட்க மாட்டார்கள்.


வங்கி சார்பில் எந்த லாட்டரி திட்டமோ அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் பரிசுப் போட்டியோ நடத்தப்படவில்லை. எனவே, எந்த அழைப்புக்கும் பதிலளிக்கும்முன் எச்சரிக்கையாக இருங்கள்.


நீங்கள் செய்யும் ஒரேயொரு தவறுக்காகவே மோசடியாளர்கள் காத்திருக்கிறார்கள். இதுபோன்ற அழைப்புகளை உண்மையென நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment