TIK TOK செயலிக்கு மாற்றாக களமிறங்கியுள்ள Q TOK - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 14, 2020

TIK TOK செயலிக்கு மாற்றாக களமிறங்கியுள்ள Q TOK

TIK TOK செயலிக்கு மாற்றாக களமிறங்கியுள்ள Q TOK

இந்தியாவின் மிக சிறந்த வீடியோ பகிரும் தளமாக டிக்டாக் இருந்து வந்தது. சமூக வலைத்தளங்களில் பலரின் திறமையை வெளிக்காட்ட ஒரு பெரிய தளமாகவும் இணையதளவசிகளுக்கு இருந்தது. அதன் தடைக்கு பிறகு வீடியோ பகிரும் செயலிகள் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.

இந்நிலையில் அதனை சமன் செய்யும் விதமாக கொச்சியை சேர்ந்த ஸ்டூடியோ 90 Innovations Private limited என்ற நிறுவனம் " Q TOK " என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டாக் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த செயலின் மூலம் பயன்பாட்டாளர்கள் நேரலையாக வீடியோக்களை 30 வினாடிக்கு குறைவாகவும் மற்றும் 5 நிமிடத்திற்கு குறைவாகவும் பதிவேற்றம் செய்ய முடியும்.

இதுவரை கேரளாவில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதனை தரவிரக்கம் செய்துள்ளனர்.

Q TOK செயலியை பற்றி அதன் தலைவர் தீப்பூ R.சசிதரன் கூறியதாவது.. "டிக்டாக் தடைக்கு முன்பே எங்களது " QTOK " செயலியின் முதற்கட்ட வேலையை துவங்கியிருந்தோம். டிக்டாக் செயலியைவிட நிறைய அம்சங்களை அதில் சேர்க்க முடிவு செய்த்திருந்தோம்,

 அனால் டிக்டாக் தடையினால் எங்கள் முடிவில் சில திருத்தங்களை செய்தோம். டிக்டாக் செயலியில் இருப்பது போலவே அதன் அம்சங்களை கொண்டே உருவாக்கி விட்டோம்

. விளம்பரம் மற்றும் அதன் வீடியோக்களை தவிற்கும் விதமாக தற்போது வீடியோவின் நீளத்தை ஒரு நிமிடத்திற்கு குறைத்துள்ளோம் மற்றும் நேரலை வீடியோவை 45 வினாடிக்கு உயர்த்தி உள்ளோம். அதனால் மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த Q TOK செயலியை தினசரி 23 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.

டிக்டாக போன்றே இந்த Q TOK செயலியும் அனைத்து மக்களிடடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment