10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 14, 2020

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு


10 -ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 23-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி அல்லது தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.


தேர்வர்களும் பெற்றோர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


முன்னதாக  (அக்.14) முதல் நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment