மத்திய, மாநில அரசு துறைகளில் 15 லட்சம் காலி பணியிடங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 20, 2020

மத்திய, மாநில அரசு துறைகளில் 15 லட்சம் காலி பணியிடங்கள்

 மத்திய, மாநில அரசு துறைகளில்  15 லட்சம் காலி பணியிடங்கள்


'நாடு முழுவதும் வேலைவாய்ப்புக்காக 15 கோடி இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 



மத்திய, மாநில அரசு துறைகளில் 15 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் செல்வம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நவ., 26 நடத்தும் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 66 துறை வாரியான சங்கங்கள் பங்கேற்கும். 



இதுகுறித்து சமீபத்தில் நடந்த சங்க மாநில செயற்குழு, அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி ரத்து, சரண்டர்விடுப்பு ரத்து போன்ற சலுகைகளை அரசு திரும்ப வழங்க வேண்டும். தமிழகத்தில் நாலரை லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 



மத்திய, மாநில அரசு துறைகளில் அவுட்சோர்சிங், ஒப்பந்தமுறை நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். சில துறைகளில் அமலில் உள்ள கட்டாய ஓய்வு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடக்கிறது.


அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை டிச., 20 தர்மபுரியில் கூடுகிறது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன, என்றார். நிர்வாகிகள் நீதிராஜா, தமிழ் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment