25 பாடங்களுக்கு யு.ஜி.சி., அனுமதி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 14, 2020

25 பாடங்களுக்கு யு.ஜி.சி., அனுமதி

 25 பாடங்களுக்கு யு.ஜி.சி., அனுமதி


மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது:


பல்கலை தொலைநிலை கல்வித் திட்டத்தில் 2020- 2021 கல்வியாண்டில் கலை மற்றும் வணிக வியல் இளங்கலை முதுகலையில் 25 பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரக் குறிப்புகள் பல்கலை, அழகர்கோவில் ரோடு மாலைநேரக் கல்லுாரி, திருமங்கலம், சாத்துார், அருப்புக்கோட்டை, வேடசந்துார் உறுப்பு கல்லுாரிகள், திண்டுக்கல், தேனி, பெரியகுளம், பழநி மாலை நேரக் கல்லுாரிகளில் மட்டும் பெறலாம். வேறு கல்வி மையங்களை அணுக வேண்டாம்.


 மேலும் விவரங்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அக்.,31 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment