கல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 24, 2020

கல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம்

 கல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம்


எழுத, படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என்ற திட்டத்தை செயல்படுத்த மாநில பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது


.கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, 1.24 கோடி பேர் முற்றிலும் படிக்கவும், எழுதவும் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும்.


 இதனை கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களில் உள்ள, 3 லட்சம் பேருக்கு பிப்., 2021க்குள் எழுத்தறிவு கல்வி வழங்க, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.'கற்போம் எழுதுவோம் இயக்கம்' எனும் பெயரில் இத்திட்டம் நவ., மாதம் முதல் முற்றிலும் தன்னார்வலர்கள்கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.


 முதல்கட்டமாக, கிராமம், வார்டு வாரியாக, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் குடும்ப விவரம் மற்றும் சர்வே அடிப்படையில் 'கல்வி நிலை' என்ற பகுதியில், 15 வயதுக்குமேற்பட்டோரின் விவரங்கள் சேகரிப்பட உள்ளன.மகளிர் சுய உதவிகுழு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், ஆசிரியர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, கிராம கல்வி குழு, ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களைக்கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.'


கற்போர் கல்வியறிவு' மையம்அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 'கற்போர் கல்வியறிவு' மையங்களாக செயல்படும். வரும் நவ., 23ம் தேதிக்குள் இம்மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு மையத்திலும், குறைந்தபட்சம், 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவை புகட்ட வேண்டும் என்பது இலக்கு.யாரெல்லாம் கற்பிக்கலாம்!குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யாவரும் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் கற்பித்தல் சேவையை வழங்கலாம்.


 பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக இவர்களின் விவரங்களை, நவ., 11க்குள் திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 குறைந்தபட்சம், 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கி, தேர்ச்சி பெற வைக்கும் தன்னார்வலர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்குவார்.ஒரு நாளைக்கு 2 மணி நேரம்ஒரு கல்வியாண்டில் மே~ ஆக., செப்., ~டிச., ஜன., ~ ஏப்., என, மூன்று கட்டமாக இம்மையங்கள் செயல்படும்.


 ஒரு நாளைக்கு, 2 மணி நேரம் வீதம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பணி நடக்க உள்ளன. ஒவ்வொரு கட்ட இறுதியிலும், தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனத்தின் வாயிலாக, இறுதி மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும்.


வேலை உறுதி திட்டம், அரசு மற்றும் அரசு சாரா மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரிவோருக்கு அவரவர் பணியிடத்திலேயே ஏதுவான நேரத்தில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment