ஓவிய கல்லூரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 29, 2020

ஓவிய கல்லூரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு

 ஓவிய கல்லூரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு


அரசு ஓவிய கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நேர்முக தேர்வு நவ. 3ல் நடக்க உள்ளது.


தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை எழும்பூர் கும்பகோணம் மற்றும் கொட்டையூர் ஆகிய இடங்களில் பாரம்பரியமிக்க ஓவிய கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஓவியம் சிற்பம் காட்சி தொடர்பியல் வணிக ஓவியங்கள் ஆடை வடிவமைப்பு வரைகலை சிற்பக்கலை போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை நேர்முக செய்முறை தேர்வு வழியாக தேர்ந்தெடுக்கின்றனர்.நவ. 3ல் சென்னை ஓவிய கல்லூரி மாணவர்களுக்கும் நவ. 5ல் கும்பகோணம் ஓவிய கல்லூரி மாணவர்களுக்கும் நேர்முக செய்முறை தேர்வு நடக்க உள்ளது.

No comments:

Post a Comment