தேர்வு முறைகேடு மேலும் 6 பேர் கைது - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 11, 2020

தேர்வு முறைகேடு மேலும் 6 பேர் கைது

 தேர்வு முறைகேடு மேலும் 6 பேர் கைது


டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் - 2ஏ' தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஆறு பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4; குரூப் - 2ஏ; வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். 


இந்த முறைகேட்டுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 51 பேரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர்.


 கொரோனா பரவல் காரணமாக, தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.


தற்போது, விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை எழும்பூரில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கர் தலைமையிலான போலீசார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் உட்பட, மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளனர். பின், அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, ஜாமினில் விடுவித்தனர். 


இன்னும், 20 பேரை தேடி வருவதால், தற்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment