7 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : ‘ஷிப்ட்’ முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 19, 2020

7 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : ‘ஷிப்ட்’ முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது

 7 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : ‘ஷிப்ட்’ முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது


உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்புகள் ‘சிப்ட்’ முறையில் செயல்பட தொடங்கி உள்ளன. கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 13 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 


ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அக். 15 முதல் தொடர்ச்சியாக பள்ளிகளைத் திறக்க சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. இருப்பினும், பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், டெல்லி, கர்நாடகா, சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பள்ளிகளை திறக்கும் முடிவை ஒத்தி வைத்துள்ளன


இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகள் இன்று (அக். 19) திறக்கப்பட்டன. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 


பள்ளிகள் இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்படுகிறது. 9 மற்றும் 10 வகுப்புகள் காலை 8.50 முதல் 11.50 வரை மற்றும் 11 மற்றும் 12 வகுப்புகள் 12.20 முதல் 3.20 வரை நடத்தப்படுகிறது. பள்ளியைத் திறக்கும்போது கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதேபோல், பஞ்சாபில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 


வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு மாணவர் மட்டுமே பெஞ்சில் அமர அமர ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் நெரிசலைத் தடுக்க, பள்ளியின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டன.


அதேபோல், சிக்கிம் அரசு இன்று முதல் பள்ளிகளை மீண்டும் திறக்கப்பட்டன. வகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே நடக்கும். சனிக்கிழமை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறைகள் அனுமதிக்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்படவில்லை.


 இதேபோல், ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் நவ. 2ம் தேதி முதலும், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள் நவ. 23ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment