வேளாண் பல்கலை பட்டய படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

வேளாண் பல்கலை பட்டய படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 வேளாண் பல்கலை பட்டய படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் மூன்று உறுப்பு கல்விநிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. 


இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கு, 2020~21 கல்வி ஆண்டுக்கு, 860 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, செப்., 10ல் துவங்கியது


http://tnauonline.in


 என்ற இணைய முகவரியில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் மற்றும் சான்றிதழ்களை இணைத்து, இணையதள வாயிலாக சமர்ப்பிக்க, இன்று (அக்., 16) கடைசி நாள். 


பதிவுத் தபாலில், அக்., 21 மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தரவரிசைப்பட்டியல் அக்., 29ல் வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment