படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: கலெக்டர் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 18, 2020

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: கலெக்டர் தகவல்

 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: கலெக்டர் தகவல்


கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்ட அறிக்கை: 


தமிழக அரசு படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அறிவித்து 2020-21ம் வருடத்திற்கு இலக்காக 195 மனுதாரர்களுக்கு மானியமாக ₹125 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


 அதிகபட்சமாக 35 வயது பொது பிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் உற்பத்தி தொழிலுக்கு ₹10 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் ₹5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.   


மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


   திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ₹1.25 லட்சம் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை இரு நகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். 


மேலும்

விவரங்கள் பெற பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சிட்கோ தொழிற்பேட்டை காக்களுர் தபால் நிலையம் அருகில் திருவள்ளுர் தாலுகா என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27666787, 27663796 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment