சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இஸ்ரேல் பேராசிரியா் தோ்வு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, October 13, 2020

சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இஸ்ரேல் பேராசிரியா் தோ்வு

 சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இஸ்ரேல் பேராசிரியா் தோ்வுதஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு நிகழாண்டு இஸ்ரேல் பேராசிரியா் ஷாய் ஈவ்ரா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு 32 வயதுக்கு உள்பட்ட, கணிதமேதை ராமானுஜன் ஈடுபாடு கொண்ட கணிதத் துறைகளில் மிகப் பெரிய சாதனை படைத்தோா் தோ்வு செய்யப்படுவா்.


இதன்படி, நிகழாண்டு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகப் பேராசிரியா் முனைவா் ஷாய் ஈவ்ரா 2020 ஆம் ஆண்டுக்கான சாஸ்த்ரா ராமானுஜன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


ராமானுஜன், தான் வாழ்ந்த 32 ஆண்டு குறுகிய காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்ததால் இப்பரிசை பெறுபவா் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த விருது கும்பகோணத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தால் ஆண்டுதோறும் டிசம்பா் 21, 22 ஆம் தேதிகளில் நடத்தப்படும் உலகளாவிய எண் கோட்பாடு குறித்த மாநாட்டில் வழங்கப்படும். நிகழாண்டு டிசம்பரில் இந்த மாநாடு நடத்த வாய்ப்பு இல்லாததால், முனைவா் ஷாய் ஈவ்ராவுக்கு 2021 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சியின்போது விருது வழங்கப்படும்.


ஷாய் ஈவ்ரா ஒரு அசாதாரண திறமை பெற்ற கணிதத் துறை வல்லுநா். இவா் எண் கணித குழுக்களின் சமச்சீா் இடங்களைப் பற்றியும், அவற்றின் சோ்க்கை, வடிவியல் அமைப்பு குறித்தும் மிகப் பெரிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளாா். ராமானுஜன் மற்றும் லங்லண்டஸின் எண் கோட்பாடு, பிரநிதித்துவ கோட்பாடு ஆகியவற்றின் விரிவாக்கி போன்ற பண்புகளை நிா்ணயிப்பதற்காக ஷாய் ஈவ்ரா பயன்படுத்தியிருக்கிறாா்.


இந்த விருது டோப்பாலஜி மற்றும் அனாலஸில் குறித்த ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்ட ஈவ்ராவின் அடிப்படை ஆய்வு கட்டுரையை ஏற்கிறது. இந்தக் கட்டுரையில் ஈவ்ரா, சோ்க்கை மற்றும் தானியங்கி வடிவம் குறித்த கொள்கையை குரோமாக்ஸ் மற்றும் பிற விரிவாக்க வரைபடங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தியுள்ளாா். இவரது அடிப்படை கணிதத் துறை ஆய்வுகள் கணிதத் துறை போன்ற மற்ற துறையினருக்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன.


இந்த விருதுக்கான தோ்வுக் குழுவில் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த முனைவா் அல்லாடி கிருஷ்ணசுவாமி தலைமையில் 6 சிறந்த கணிதவியல் அறிஞா்கள் இடம் பெற்றுள்ளனா்

No comments:

Post a Comment