இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம்.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 19, 2020

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம்..

 இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம்..


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஜூலைக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு ஆக.1ல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும்


.இந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால் அக்.1 முதல் மாணவர் சேர்க்கை துவங்கியது. அக்.,31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.


இந்நிலையில் மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.


அதன்படி நவம்பர் 30 வரை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். டிசம்பர் 1க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும் என கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 


இதற்கிடையில் அண்ணா பல்கலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.


இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைனில் வகுப்புகள் துவங்கப்பட்டன. இம்மாதம் 26க்குள் பாடங்களை முடித்து நவ. 2 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. 


தற்போது இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு நவ. 13 வரை வகுப்புகளை நடத்தலாம்; நவ. 19 முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment