இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்: வழிமுறை வெளியீடு
நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவு குறித்த வழிமுறைகளை, உயர் கல்வித் துறை வெளியிட்டது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, அக்., 1ல், கவுன்சிலிங் துவங்கியது. 2ம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
நேற்றும், இன்றும் விருப்ப பதிவுகளை ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும்.நாளை மாணவர்களின் விருப்பப்படி, உத்தேச ஒதுக்கீட்டு பட்டியல் வழங்கப்படும். பின், 6ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு தரப்படும்.
இதில், விருப்பப்பட்ட இடம் கிடைக்காதவர்கள், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இந்நிலையில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி என்ற வழிமுறைகளை, நேற்று முன்தினம் வரை, உயர் கல்வித் துறை வெளியிடாமல் இருந்தது. அதனால், கவுன்சிலிங்கில்பங்கேற்பது எப்படி என்று தெரியாமல், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்
இது குறித்து, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது.உடனே, உயர் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கான வழிமுறைகளை, நேற்று வெளியிட்டனர்
.இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின்,www.tneaonline.orgஎன்ற இணைய தளத்தில், விருப்ப பதிவு வழிமுறைகள், 'யு டியூப்' வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு செய்யும் கல்லுாரிகளின் எண்ணிக்கையை, கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாணவரும், குறைந்தது, 46 கல்லுாரிகளையாவது விருப்ப பட்டியலில் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு மாணவரின் பொது தரவரிசைஎண், 36 என்றால், அந்த மாணவர் குறைந்தபட்சம், 46 கல்லுாரிகளையாவது தேர்வு செய்ய வேண்டும்.
அதற்கு மேலும் பட்டியலிடலாம்.அதனால், அவர்களின் வரிசையான தேர்வில்,விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்கும் வாய்ப்புள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment