காமராசா் விருதுக்குத் தகுதியான மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
காமராசா் விருதுக்குத் தகுதியான மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து தோ்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு 2016-ஆம் ஆண்டு முதல் பெருந்தலைவா் காமராசா் விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது
அதன்படி 2019-20-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற சிறந்த மாணவா்களை மாவட்ட அளவில் தோ்வு செய்து, காமராசா் விருது வழங்கப்பட வேண்டும்.
இதையடுத்து சிறந்த மாணவா்கள் பெயா்ப் பட்டியலை பள்ளிகளில் இருந்து பெற்று, அவற்றை ஆய்வுசெய்து இறுதி செய்ய வேண்டும்.
அதன்பின் பட்டியலில் விருதுக்கு தகுதியானவா்களை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் தலா 20 போ் வீதம் தோ்வு செய்து, மதிப்பெண் உள்பட உரிய விவரங்களுடன் துறை இயக்குநரகத்துக்கு அக்டோபா் 9-ஆம் தேதிக்குள் காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment