கரூர் சாலையில் சிதறிய பல்கலை விடைத்தாள்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 19, 2020

கரூர் சாலையில் சிதறிய பல்கலை விடைத்தாள்கள்

 கரூர் சாலையில் சிதறிய பல்கலை விடைத்தாள்கள்


கரூர் அருகே, சாலையோரத்தில், பல்கலை விடைத்தாள் சிதறி கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


கரூர், திருச்சி நெடுஞ்சாலை, ஆர்.புதுக்கோட்டை முனியப்பன் கோவில் சாலை அருகில், நேற்று முன்தினம் இரவு, திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து, தேர்வு விடைத்தாள்கள் சிதறி கீழே விழுந்துள்ளன. 


இது குறித்து, அந்த வழியாக சென்ற மக்கள், மாயனுார் போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணையில், சென்னை பல்கலை என்ற பெயரில் தேர்வு விடைத்தாள் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment