போலி பணி நியமன வழக்கு கல்வி அலுவலகத்தில் விசாரணை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 1, 2020

போலி பணி நியமன வழக்கு கல்வி அலுவலகத்தில் விசாரணை

 போலி பணி நியமன வழக்கு கல்வி அலுவலகத்தில் விசாரணை


ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி., போலி பணி நியமன ஆணை வழக்கு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரத்தில் 37 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு செப்., 17, 18ல் முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடந்தது.


செப்.,23ல் போலிநியமன ஆணையுடன் சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் சூரன்கோட்டை ராஜேஷ் 32, பணிக்கு சேர்ந்தார்.


குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து போலி நியமன ஆணை தயாரித்த முதன்மை கல்வி அலுவலக அதிகாரி கண்ணன் 47, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கேசவன் 45, ராஜேஷ் 32, கலைவாணன் 26, சதீஷ்குமார் 33, ஆகியோரை கைது செய்தனர்.


ஆர்.எஸ்.,மங்கலம்பள்ளியில் பணிக்கு சேர்ந்த மனோஜ் தலைமறைவாக உள்ளார். கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


நேற்று குற்றப்பிரிவு டி.எஸ்.பி., திருமலை உள்ளிட்ட போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்ணன் கம்ப்யூட்டரை ஆய்வு செய்தனர். 


அவர் கையாண்ட ஆவணங்கள் குறித்தும் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தியிடம் விசாரித்தனர். போலி பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு விசாரணையால் கல்வித்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment