'நீட்' தேர்வு முடிவுகள் வெளியீடு: ஒடிசா, பெரியகுளம் மாணவர்கள் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 16, 2020

'நீட்' தேர்வு முடிவுகள் வெளியீடு: ஒடிசா, பெரியகுளம் மாணவர்கள் சாதனை

 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியீடு: ஒடிசா, பெரியகுளம் மாணவர்கள் சாதனை


நீட்' தேர்வுக்கான முடிவுகளை, தேசிய தேர்வு முகமை, நேற்று வெளியிட்டது. 


இதில், 720 மதிப்பெண்களையும் பெற்று, ஒடிசா மாணவர் சாதனைப் படைத்தார். அரசுப் பள்ளி அளவில் தேனி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.


மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு, செப்.,13ல் நடந்தது.


கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, பல மாணவர்களால், அப்போது தேர்வு எழுத முடிய வில்லை. பின், விடுபட்ட மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. 


மொத்தமாக, 14 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. 



இதில், 7.7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஒடிசாவைச் சேர்ந்த ஷோயப் அப்தாப், 18, முழுமையாக, 720 மதிப்பெண்களையும் பெற்று, சாதனை படைத்தார்.


நீட் தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலில், முதலிடம் பிடித்த, முதல் ஒடிசா மாணவர், என்ற பெருமையும், அவருக்கு கிடைத்துள்ளது 


.இதேபோல், நீட் தேர்வில், முழு மதிப்பெண்களை பெற்ற மாணவர் என்ற சாதனையையும் இவர் படைத்துஉள்ளார்.ஷோயப், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் படித்தவர்; இவர், டில்லியில் உள்ள எய்ம்சில், இளநிலை மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பதை விருப்பமாக வைத்துள்ளார்.


நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான, ntaneet.nic.in ~ல் சென்று பார்க்கலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்களை, தேசிய தேர்வு முகமை, விரைவில் வெளியிடும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.


‌ தேனி மாணவர் ‌


தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் என்.ஜீவித்குமார் 18. நீட்தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் அரசு பள்ளியில் முதல் மாணவராக வெற்றி பெற்று, மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.


இவர் இந்திய அளவில் 664 மதிப்பெண்ணுடன் தரவரிசை பட்டியலில் 1823ம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி, தாய் மகேஸ்வரி நுாறு நாள் வேலை தொழிலாளி.


ஜீவித்குமார் கூறுகையில்: இந்த பிரபஞ்சத்தில் கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. வறுமையை சுக்குநுாறாக உடைத்து ஏற்றத்தை தரும் சக்தி கல்விக்கு உண்டு.


 தமிழ் மொழி என்னை படிக்கட்டுகளில் ஏற்றிவிட்டு, இன்று அழகு பார்த்துள்ளது. மகாகவி பாரதியார் பாடல் வரிகள் என்னை தன்னம்பிக்கை மாணவராக உருவாக்கியது. தினமும் என்னை உற்சாகப்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் ஏ.மோகன் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். 


மாணவர்களின் அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை உட்பட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொக்கிஷமான தினமலர் 'பட்டம்' படித்ததால் நுணுக்கமான கேள்விகளை ஆராயமுடிந்தது. சாதனை நிகழ்த்துவதற்கு ஏதுவாக இருந்தது, என்றார்.

No comments:

Post a Comment