சுவரில் மெட்ரோ ரயில் ஓவியம்; மாநகராட்சி பள்ளியில் அசத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 8, 2020

சுவரில் மெட்ரோ ரயில் ஓவியம்; மாநகராட்சி பள்ளியில் அசத்தல்

 சுவரில் மெட்ரோ ரயில் ஓவியம்; மாநகராட்சி பள்ளியில் அசத்தல்


மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில், மெட்ரோ ரயில் ஓவியம், தத்ரூபமாக வரையப்பட்டுள்ளதை கண்டு, பெற்றோர், மாணவர்கள் வியந்தனர்.


சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகர், 10வது தெருவில் செயல்படும் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 280 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.


பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளால், இவ்வாண்டு, 120 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.தற்போது, மாநகராட்சி சார்பாக, பள்ளி கட்டடம் பழுதுபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.


தனியார் ஒப்பந்த நிறுவனம், பள்ளி வெளி சுவரில், வர்ணம் தீட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.


பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி செல்வி சாராள் மற்றும் இடைநிலை ஆசிரியர் வாசுகி யோசனை படி, சுவரில் மெட்ரோ ரயில் போல் ஓவியம் வரைய திட்டமிடப்பட்டது.


அதன்படி, ஒப்பந்த நிறுவன அதிகாரி சரவணன் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், பள்ளி வெளி சுவரில், மெட்ரோ ரயில் போன்ற ஓவியத்தை, நான்கு நாட்களில் வரைந்துள்ளனர்.இது குறித்து, தலைமை ஆசிரியை கூறியதாவது:


இப்பகுதியில், நான்கு தனியார் தொடக்கப்பள்ளிகள் உள்ளன.


 அப்பள்ளிகளுக்கு சவாலாக, மாணவர் சேர்க்கையில், அன்னை சிவகாமி நகர், மாநகராட்சி தொடக்கப்பள்ளி சாதனை படைத்து வருகிறது.இம்முறை, மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 


அந்த வகையில், மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பழுதுபார்ப்பு பணியில், மெட்ரோ ரயில் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.No comments:

Post a Comment