ஜியோ, ஜெனிடிக் இன்ஜினியர் காலத்துக்கு ஏற்ற படிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, October 13, 2020

ஜியோ, ஜெனிடிக் இன்ஜினியர் காலத்துக்கு ஏற்ற படிப்பு

 ஜியோ, ஜெனிடிக் இன்ஜினியர் காலத்துக்கு ஏற்ற படிப்பு


ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஜெனிடிக் இன்ஜினியரிங் துறைகள், காலத்துக்கு ஏற்றவாறு கவனத்தை ஈர்க்கும் படிப்புகளான உள்ளன.ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் ~ பி.இ.,இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில், புவி சார்ந்த இடங்கள் குறித்து ஆராய்ந்து கற்கும் துறை தான், 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்' எனப்படுகிறது.


 மாநகர திட்டமிடல், சுற்றுச்சூழல் நிர்வாகம் போன்றவை, முன் எப்போதும் இருந்திராத அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதுதொடர்பான ஏராளமான தகவல்களும் புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


 ஆனால், இவற்றை வகை தொகைப்படுத்தி, எல்லோரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அளிப்பதும், அவை அவ்வப்போது அப்டேட் செய்வதும் கட்டாயமான தேவைகள்.புவிவெளி ஆய்வு, புவி மாடலிங், புவிவெளி தரவுகளை உருவாக்குதல் போன்றவற்றை பயிற்றுவிப்பது இந்தப் பாடத் திட்டத்தின்முக்கிய நோக்கம். இது நான்கு ஆண்டு கால படிப்பு. 


இதே பிரிவில், முதுகலை படிப்பும் உள்ளது. ஜெனிடிக் இன்ஜினியரிங் ~ பி.இ.,மூலக்கூறுகள் குறித்த, 'மாலிக்குலர் இன்ஜினியரிங்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்கு மற்றும் தாவரங்களின் மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்துவதே, 'ஜெனிடிக் இன்ஜினியரிங்' துறை. 


புதிய மரபணு பொருளை சேர்ப்பதன் மூலம் விரும்பத்தகாத அம்சம் நீக்கப்படவும், தேவையான அம்சத்தைப் பெறவும் முடியும்.இயற்கையை நம் வசதிக்கு மாற்றி கொள்ளும் இந்த புதிய படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இது நான்கு ஆண்டு கால படிப்பு. இதே பிரிவில் முதுகலை படிப்பும் உள்ளது.

No comments:

Post a Comment