வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக குறுகிய கால பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக குறுகிய கால பயிற்சி

 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக குறுகிய கால பயிற்சி


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, இலவசமாக குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.


இது குறித்து, கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, அமெரிக்க நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற, 50 ஆயிரம் பேருக்கு இணைய வழியில், 11 பிரிவுகளில், 4,000க்கும் மேற்பட்ட வகையிலான பாடங்களில், இலவசமாக குறுகிய கால பயிற்சி அளித்திடும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


 இந்நிறுவனம் பல்கலை கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி, சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்குகிறது. உலகின் முன்னணி பல்கலை கழகங்கள், தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுனர்களை கொண்டு, தரமான பாடகுறிப்புகள் மற்றும் காணொலி பாடத்தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுகிறது.


 பயிற்சி முடிந்தவுடன், இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியானவராகவும், வேலைவாய்பற்றவராகவும் இருத்தல் வேண்டும்.


 இதற்கு,ஆதார் எண், இ.மெயில், மொபைல் எண் ஆகிய விபரங்களுடன் வரும், 31க்குள், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment