சிவகங்கையில் கேந்திரியா வித்யாலயா பள்ளி: அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் இலுப்பை குடியில் கேந்திரியா வித்யாலயா பள்ளி புதிதாக அமைக்கப்பட உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் அமையும் கேந்திரியா வித்யாலயா மிகச்சிறந்த தரமான பள்ளி கல்வியை தரும்விதமாக அமையும் என நம்புகிறேன். கேந்திரியா வித்யாலயா பள்ளிகளின் வரிசையில் 1243வது பள்ளிஇது” என்றார்.

No comments:
Post a Comment