இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 6, 2020

இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது


தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு 2019 ஆகிய பதவிகளுக்கான முறையே முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2020 முதல் 14.10.2020 மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவர்களுக்குத் தெரிவில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.


சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் இ-சேவைகளின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment