மாணவர்கள் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 10, 2020

மாணவர்கள் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

 மாணவர்கள் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம்


பொறியியல் மாணவர்கள் அக்.29-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என்று கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்துப் படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள்ளும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது


மீண்டும் செப்டம்பர் 19-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம், கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அவகாசம் அளித்தது.


இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment