இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கணினி அறிவியலுக்கு போட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, October 13, 2020

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கணினி அறிவியலுக்கு போட்டி

 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில்  கணினி அறிவியலுக்கு போட்டி


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.


தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின் முதல் சுற்றின், விருப்ப பதிவு நேற்றுடன் முடிந்தது. மாணவர்களுக்கான உத்தேச ஒதுக்கீட்டு உத்தரவு, இன்று வழங்கப்படுகிறது.


இந்த ஒதுக்கீட்டை மாணவர்கள், நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு, நாளை மறுநாள் இறுதி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.


முதல் சுற்றை பொறுத்தவரை, பெரும்பாலான மாணவ ~ மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாட பிரிவுகளையே, தங்களின் விருப்ப பாடங்களில் பதிவு செய்துள்ளனர்.


பொது பிரிவில், அந்த பாடங்கள் இல்லையென்றாலும், சுயநிதி பிரிவில் இருந்தாலும், அந்த பாடங்களை, மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்துள்ளது.


 அதிலும், மாணவியர் அதிக அளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதற்கிடையில், இரண்டாம் சுற்றுக்கு, கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நாளை முடிகிறது. 


இதையடுத்து, நாளை மறுநாள் முதல், அவர்களுக்கு விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளின் பதிவு துவங்க உள்ளது.விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment