மாணவர்கள் வசதிக்காக விரைவு தபால் வசதி
பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும், விரைவு தபால் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது,'' என, பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு, 'ஆன்லைன்' முறையில் நடைபெறுகிறது.
மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை விரைவு தபாலில் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகள் முடியும் வரை, பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் விரைவு தபால் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும், அனைத்து கிளை தபால் அலுவலகங்களிலும் விரைவு தபால் அனுப்பும் வசதி உள்ளது.
இந்த வசதியை அனைத்து பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment