இன்ஜினியரிங் விருப்ப பதிவு இன்று துவக்கம்: இணையதளத்தில் காலியிட பட்டியல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 11, 2020

இன்ஜினியரிங் விருப்ப பதிவு இன்று துவக்கம்: இணையதளத்தில் காலியிட பட்டியல்

 இன்ஜினியரிங் விருப்ப பதிவு இன்று துவக்கம்: இணையதளத்தில் காலியிட பட்டியல்


இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்றில், விரும்பும் கல்லூரி மற்றும் பாடங்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது.


அதற்கு வசதியாக, தற்போது காலியாக உள்ள இடங்களின் விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.'


ஆன்லைன் கவுன்சிலிங்'


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. 


இந்த ஆண்டு, 1.12 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 2,000 பேருக்கு, சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் பங்கேற்க அனுமதி தரப்பட்டது; அதில், 500 பேர், படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.


இந்நிலையில், பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங், அக்., 8ல் துவங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்யாத மாணவர்களையும் சேர்த்து, 1.11 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர்.


முதல் சுற்றில், 'கட் ஆப்' மதிப்பெண், 199.67ல் இருந்து, 175 வரை பெற்ற, 12 ஆயிரத்து, 300 மாணவர்கள், இடங்களை தேர்வு செய்யலாம். கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட, நான்கு நாள் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.


இணையதளம் 


இதையடுத்து, தங்களுக்கு தேவையான கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, விருப்ப பட்டியலில் பதிவு செய்வதற்கு, இன்றும், நாளையும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக, நேற்றைய நிலவரப்படி, 461 கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவு வாரியான காலியிட பட்டியல், www.tneaonline.org/ என்ற, இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.


பொதுப் பிரிவு, ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பிரிவு ஆகியவற்றில், தனித்தனியாக காலியாக உள்ள இடங்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவற்றை பார்த்து, மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம்.


ஒவ்வொரு மாணவரும், ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்களை பதிவு செய்யலாம். எது முதலில் வேண்டும் என்ற வரிசைப்படி பதிவு செய்தால், அவர்களுக்கான வாய்ப்பு வரும் போது, வரிசையில் எந்த பாடப் பிரிவு மற்றும் கல்லுாரி உள்ளதோ, அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

No comments:

Post a Comment