பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 18, 2020

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி

 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி


தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


மேலும், ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார்.


 இந்த நிகழ்ச்சியின் பின்னர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு செய்தியாளர்களிடம் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.


இந்த நிலையில், இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.


 மேலும் முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், நீட் தேர்வுக்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment