தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 14, 2020

தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

 தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்


தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


 தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றலை மாணவர்களுக்குக் கடத்தி வருகிறது


இதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை.


 இதற்கிடையே ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ம் தேதி தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து, பாடம் நடத்துவதாகப் புகார் எழுந்தது.


இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி விசாரணை நடத்தினார். 


மேலும் அரசு உத்தரவை மீறித் தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment