கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை முடிகிறது அவகாசம்
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை முடிகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன
.இந்த கல்லூரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு; உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்புகளுக்கு, 2020 ~ ~21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, நாளை மாலை, 6:00 மணி கடைசி நாள்.இந்த படிப்புகளுக்கு, இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாட்டு வாழ் இந்திய மாணவர்கள் எனப்படும், என்.ஆர்.ஐ., மாணவர்கள் விண்ணப்பிக்க, வரும், 23ம் தேதி கடைசி நாள்.

No comments:
Post a Comment