பகுதி நேர இன்ஜினியரிங் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

பகுதி நேர இன்ஜினியரிங்

 பகுதி நேர இன்ஜினியரிங்


கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சி.ஐ.டி., கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, திருநெல்வேலி அரசு இன்ஜி., கல்லூரி, சேலம் அரசு இன்ஜி., கல்லூரி உள்ளிட்டவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.


அவற்றில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்த பணியை, கோவை சி.ஐ.டி., கல்லூரி மேற்கொண்டுள்ளது.


மொத்தம், 1,465 இடங்களுக்கு, 1,201 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில், 520 பேரின் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. 


இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள் ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நாளை நடக்கிறது


பொதுப்பிரிவினருக்கு வரும், 15, 16ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்கிறது. மேலும் விபரங்களை, www.ptbe-tnea.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment