இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 16, 2020

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது ?

 இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது ?


இந்தியாவில், கொரோனா தடுப்பூசி, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தயாராகிவிடும்' என, 'சீரம்' நிறுவனம் தயாரித்துள்ளது.


சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா, இப்போது உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.


 இந்தியாவில், மூன்று நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு பற்றிய மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது.


இதில், நாட்டின் பல முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் செயல் இயக்குனர் சுரேஷ் ஜாதவ் பேசியதாவது:


கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இப்போது, தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளோம். நாங்கள் திட்டமிட்டுள்ளபடி அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு மார்ச்க்குள், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். 


அதன்பின், ஆண்டுக்கு, 80 கோடி தடுப்பூசிகளை எங்களால் தயாரிக்க முடியும். முதலில், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அதன் பின், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment