தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 11, 2020

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம்

 தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம்


வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, இரண்டு மாதங்களில், 6.81 லட்சம் குறைந்துள்ளது. 


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், இந்தாண்டு ஜூலை, 31வரை, 66.31 லட்சம் பேர், வேலைக்காக, தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். செப்., 30 நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 59.50 லட்சம் பேர் மட்டும், வேலைக்காக பதிவு செய்து உள்ளனர். 


இரண்டு மாதங்களில், பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, 6.81 லட்சம் குறைந்துள்ளது. ஜூலையில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, 12.50 லட்சமாக இருந்தது. தற்போது, 11.41 லட்சமாக குறைந்துள்ளது. 


அதேபோல், 19 வயது முதல் 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள் எண்ணிக்கை, 17.46 லட்சத்தில் இருந்து, 13.13 லட்சமாகவும், 24 முதல், 35 வயது வரையுள்ள, அரசு பணி வேண்டி காத்திருப்போர் எண்ணிக்கை, 24.55 லட்சத்தில் இருந்து, 23.39 லட்சமாகவும் குறைந்துள்ளது. 


வயது, 36 முதல் 57 வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவாளர்கள் எண்ணிக்கை, 11.69 லட்சத்தில் இருந்து, 11.47 லட்சமாகவும், 58 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 9,192ல் இருந்து, 9,046 ஆகவும் குறைந்துள்ளது.


இரண்டு மாதங்களில், திடீரென, 6.81 லட்சம் பதிவுதாரர்கள் எண்ணிக்கை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment