பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 14, 2020

பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

 பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தங்கள் உறுப்பினர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக புகார்கள், உதவிகள், சந்தேகங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக கேட்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


கொரோனா சூழலில் பி.எப்., சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க வாட்ஸ்அப் மூலம் குறைகளை களையும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய தொலைதொடர்பு களமாக வாட்ஸ்அப் உள்ளது. 


இந்த திட்டம் மூலம் அனைத்து சந்தாதாரர்களையும் நேரடியாக அணுகி பிரச்னைகளை தீர்க்க முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு 138 மண்டல அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் செயல்படும்.மண்டல வாட்ஸ்அப் உதவி எண்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி தேவையான தகவல்களை பெறலாம். இதற்கென மண்டல அலுவலகங்களில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 


மண்டல வாரியாக வாட்ஸ்அப் உதவி எண்கள் பட்டியல்  இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் சென்னை, தாம்பரம், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை 1.6 லட்சம் புகார்களை நிவர்த்தி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

2 comments: