முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு

 

முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு


உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில் முதுகலை இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், சுற்றுலாவியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் உள்ளிட்ட பத்து பாடப்பிரிவுகள் உள்ளன.அரசின் நெறிமுறைகளின் அடிப்படையில், அக்., 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் www.tngasapg.in, www.tngasapg.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


 மாணவர்கள் சான்றிதழ்களை, அக்., 15 முதல் 20ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.பதிவு கட்டணம் குறித்து அதில் அறிந்து கொள்ளலாம்.


 பதிவு செய்வதில் சிரமம் இருப்பின், 044 22351014, 044 22351015, 044 28276791 என்ற எண்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொண்டு வழிகாட்டுதல் பெறலாம்.இவ்வாறு கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment