NEET , JEE பாடத்திட்டங்களை 50% குறைக்கவேண்டும் : துணை முதல்வர் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 23, 2020

NEET , JEE பாடத்திட்டங்களை 50% குறைக்கவேண்டும் : துணை முதல்வர் வலியுறுத்தல்

 NEET , JEE  பாடத்திட்டங்களை 50% குறைக்கவேண்டும் : துணை முதல்வர் வலியுறுத்தல்


நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை 50% குறைக்க வேண்டும் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வலியுறுத்தி உள்ளார்.


என்சிஇஆர்டி-ன் 57வது பொதுக்குழுக் கூட்டம், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாநிலக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கலந்துகொண்டார்.


அதில் பேசிய அவர், ’’கரோனா சூழலால் நடப்புக் கல்வியாண்டுப் பருவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்கள் தொடர்ந்து வீணாகின்றன. 


இதனால் பள்ளி பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும். அடுத்த ஆண்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை 50% குறைக்க வேண்டும்.


அதேபோல சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மே 2021-ம் ஆண்டுக்கு முன்பாக நடத்தப்படக் கூடாது. ஏனெனில் தேர்வுகளைத் தள்ளி வைத்தால் மாணவர்கள் படிப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும்’’ என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


வழக்கமாக சிபிஎஸ்இ 12- வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment