TNPSC மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 19, 2020

TNPSC மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்

 TNPSC  மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்


டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.


 கைதானவர்களில் 94 பேர் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே 51 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் 43 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


முறைகேடாக அரசுப் பணி பெற்றதாக கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சார்பதிவாளர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உதவியாளராகவும், கிராம நிர்வாக அலுவலராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


 மேலும், 40 பேரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அதிலும் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment