மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு: TNPSC தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு: TNPSC தகவல்

 மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு: TNPSC தகவல்


டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிகளில் காலியாக உள்ள 59 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்தது. 


இதே போல தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் உதவி  இயக்குனர் (பெண்கள் மட்டும்) 13 இடங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்(பெண்கள் மட்டும்) பதவியில் 89 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 16, 17ம் தேதி தேர்வு நடைபெற்றது. 


சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய வலைதளம் 

www.tnpsc.gov.in


 வெளியிடப்பட்டுள்ளது.


 சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மையங்கள் மூலமாக வருகிற 28ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். 28ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment