இந்த பட்டங்கள் செல்லாது:UGC அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 3, 2020

இந்த பட்டங்கள் செல்லாது:UGC அறிவிப்பு

 இந்த பட்டங்கள் செல்லாது:UGC அறிவிப்பு


தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஐஐபிஎம்) வழங்கும் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.


இது தொடா்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: புதுதில்லியில் பகுதி -2 குதுப் என்கிளேவ் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஐபிஎம், யுஜிசி சட்டப்படி பல்கலைக்கழகம் அல்ல. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு இல்லை. யுஜிசி அங்கீகாரம் அந்த நிறுவனத்துக்கு இல்லை என்பதால், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படிப்புகளை வழங்கும் தகுதி அந்த நிறுவனத்துக்கு இல்லை. 


மேலும், இந்த நிறுவனம் பட்டம் வழங்குவதற்கு தடைவிதித்து, தில்லி உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது என யுஜிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment