15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 9, 2020

15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல்

 15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், ஐந்தாண்டு திட்டத்திற்கான அறிக்கையை, 15வது நிதிக் குழு அளித்தது. 



கடந்த, 2016ல், மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையிலான, 15வது நிதிக் குழுவை அமைத்தது. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராய்ந்து, வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை, இக்குழு பரிந்துரைத்து வருகிறது.


 நேற்று, இக்குழுவின் தலைவர், என்.கே.சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, 2021 ~ 26 வரையிலான, ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.


 மாநிலங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகள் குறித்து, அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, நிதிக் குழு தெரிவித்துள்ளது. 



பார்லி.,யில் நிதிக் குழு அறிக்கை தாக்கல் செய்த பின், அதன் விபரங்கள் தெரியவரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம், வரி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பொறுப்பும் இக்குழுவுக்கு உள்ளது


. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியான மானியம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக அறிக்கை அளிக்கும் பணியும், நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment