வேளாண் பல்கலை கலந்தாய்வு டிச., 1 வரை நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவினருக்கு இணையதளம் வாயிலான கலந்தாய்வு, 'நிவர்' புயல் காரணமாக டிச.,1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு நவ.,26ல் துவங்குகிறது. 28 வரை நடைபெறுவதாக இருந்தது. 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவ., 30 காலை முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகள், மதியம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடக்கும். டிச.,1 காலை சிறந்த விளையாட்டுவீரர்களுக்கும், மாலை தொழில்முறைக்கல்வி பாடப்பிரிவு சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கும் கலந்தாய்வு நேரடியாக நடைபெறும்
.டிச., 2ல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு, இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இ~மெயில் மற்றும் மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும்.
டிச.,7 முதல், டிச.,24 வரை, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, ஒவ்வொரு நாளும், 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். பின், தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும். அனைத்து விபரங்களையும், https://tnauonline.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment