பிளஸ் 1 சேர்க்கை: கல்வித்துறை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 18, 2020

பிளஸ் 1 சேர்க்கை: கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 1 சேர்க்கை: கல்வித்துறை உத்தரவுபத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1ல், சேர்க்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் கடந்த செப்., மாதம் நடந்து, அக்., மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டது.


 துணைத் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும்போது சில தலைமையாசிரியர்கள், செப்.,30ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவுற்றதாக தெரிவித்துள்ளனர்.


இக்கல்வியாண்டில், சிறப்பு நிகழ்வாக, துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 1ல், சேர்க்கை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது


.இதுதொடர்பாக, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தவும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment