கொரோனாவால் மூடப்பட்ட நிலையில் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 27, 2020

கொரோனாவால் மூடப்பட்ட நிலையில் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

 கொரோனாவால் மூடப்பட்ட நிலையில் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


கொரோனாவால் மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வரும் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. 


நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்பு கலந்தாய்வு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.


 இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment