டிசம்பர் 31 ம் தேதி வரை இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 8, 2020

டிசம்பர் 31 ம் தேதி வரை இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படாது

 டிசம்பர் 31 ம் தேதி வரை இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படாது


பள்ளிகளை திறப்பதாக அறிவித்திருந்த ஒடிசா அரசு தற்போது அதைத் திரும்பப் பெற்றிருக்கிறது.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. 


தற்போது கரோனா பரவல் சற்று குறைந்திருப்பதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அந்த வகையில், ஆந்திராவில் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இது, மற்ற மாநிலங்களுக்கு ஓர்எச்சரிக்கை செய்தியாக இருந்தது.


இந்நிலையில், ஒடிசாவில் நவம்பர் 2-வது வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை அம்மாநில அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.


 ஒடிசாவில் டிசம்பர் மாதம் கரோனா பரவல் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இந்த முடிவை மாநில அரசு எடுத்திருக்கிறது. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அங்கு பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment