பல்கலை உயர் பதவிகள் 97 பேர் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 28, 2020

பல்கலை உயர் பதவிகள் 97 பேர் விண்ணப்பம்

 பல்கலை உயர் பதவிகள் 97 பேர் விண்ணப்பம்


மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள டீன், தேர்வாணையர், தொலைநிலை கல்வி இயக்குனர், கூடுதல் தேர்வாணையர் ஆகிய உயர் பதவிகளுக்கு 97 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


இப்பதவிகளுக்கு அக். 30ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவ.,20 வரை விண்ணப்பம்பெறப்பட்டன. பல்வேறு பல்கலைகளை சேர்ந்த பேராசிரியர்கள் டீன் பதவிக்கு - 42, தேர்வாணையர் - 21, தொலை நிலை கல்வி இயக்குனர் - 21, கூடுதல் தேர்வாணையர் - 10 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


 இரண்டுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்கள் பட்டியல் விவரம் பல்கலை வெப்சைட்டில் நேற்று வெளியிடப்பட்டது.


இவற்றில் ஏற்கப்பட்டோர் விவரம் மற்றும் நேர்காணல் குறித்த அறிவிப்பை துணைவேந்தர் கிருஷ்ணன் விரைவில் வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment