கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும்: கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 27, 2020

கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும்: கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு

 கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும்: கல்லூரிகளுக்கு  AICTE உத்தரவு


கல்லூரி சேர்க்கையை நவ.30-க்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.


கரோனா தொற்றால் நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை, வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ)கடந்த அக்டோபரில் வெளியிட்டது.


அதில் கல்லூரி சேர்க்கையை நவ.10-க்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர அறிவுறுத்தியிருந்தது


இந்நிலையில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று சேர்க்கையை ரத்து செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் வெளியிட்ட அறிவிப்பு:


கரோனா தொற்றால் கடும் பொருளாதார நெருடிக்கடியை பெற்றோர் சந்தித்து வருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு 8-வது முறையாக கல்வியாண்டு அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 


அதன்படி கல்லூரி சேர்க்கையை நவ.30-க்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி தரவேண்டும். சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் ரூ.1,000 மட்டுமே வசூலிக்கலாம்.


அதேபோல், நவ.30-க்கு பிறகு சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களிடம் குறிப்பிட்ட காலம் வரைகட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை தரவேண்டும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லதுநடப்பு பருவத்துக்கான கட்டணங்களை பிடித்தம் செய்யக் கூடாது.


சேர்க்கையை ரத்து செய்த ஒருவாரத்தில் தரவேண்டிய கட்டணங்கள் மற்றும் ஆவணங்கள் திருப்பிஅளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எஞ்சியுள்ள இடங்களை டிச.5 வரை நிரப்பிக் கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment