கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 7, 2020

கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் வரவேற்பு

 கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் வரவேற்பு



மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. 


திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்துக்கு பின்னர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "அரசுப்பள்ளி மாணவருக்கு, மருத்துவப்படிப்பில் சேர, 7.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது வரவேற்கத்தக்கது.


அதேபோல, அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு, கூடுதலாக, 2.5 சதவீதம் என, 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டும்.


பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி பள்ளிகளை திறக்க வேண்டும்.


போராட பயம்? எங்களது நீண்ட கால கோரிக்கைகளான, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இதற்காக போராடிய, 5,600 ஆசிரியர்கள் மீதான, 17பிஐ ரத்து செய்ய வேண்டும்.


கரோனா காலம் என்பதால் தமிழக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடியாது. 


அதற்கு பதில், சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" என்று ரங்கராஜன் கூறினார். 

1 comment:

  1. ஊக்க ஊதியம் நிறுத்தத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    ReplyDelete